பேஸ்புக் மோகம் அமெரி்க்க மக்களிடையே குறைந்து வருவதாக கருத்து கணிப்பு

பேஸ்புக் மோகம் அமெரி்க்க மக்களிடையே குறைந்து வருவதாக கருத்து கணிப்பு

facebook

டிசம்பர் 26, சமூக வலைதளங்களில் முதன்மையாக கருதப்பட்டு வரும் பேஸ்புக் அமெரி்க்க மக்களிடையே செல்வாக்கு குறைந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிராங்க் என் மாஜிட் அசோசியேஸ்ட் நிறுவனம்நடத்திய கருத்த கணிப்பில் 2012-ம் ஆண்டில் 13 -17 வயதுக்குட்பட்டவர்களிடையே 95 சதவீதம் அளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது.

கடந்தாண்டு 94சதவீதமாக குறைந்த நிலையில் இந்தாண்டு 88 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் அனைத்து தரப்பு மக்களிடையே கடந்த ஆண்டு 93 சதவீதமாக இருந்த ஆதரவு இந்தாண்டு 90 சதவீதமாக குறைந்துள்ளது.