டிசம்பர் 26, இன்று காலை 10 மணி வரை பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டோரின் எண்ணிக்கை 35,793-ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 9188 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் 212 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றிரவு 12 மணி வரை இந்த எண்ணிக்கை 30. 235-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. குவாந்தானில் மட்டும் 5439 குடும்பங்களைச் சேர்ந்த 20, 246 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது மூலம் பகாங் மாநிலத்திலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக குவாந்தான் திகழ்கிறது.