டிசம்பர் 15, தமிழ்ப்பள்ளிகளுக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்ரட் மகாதீர் ஆட்சியில் அரசாங்கத்தின் வழி கிடைக்காதது இன்று பிரதமர் நஜிப் ஆட்சியில் நிறைவாக வழங்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் துறையின் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்ட வரைவு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் கூறினார்.
கடந்தவாரம் இங்கு காண்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவிருந்த ‘தமிழ்ப்பள்ளியே என் தேர்வு’ கல்வி உருமாற்று நிகழ்வு பெற்றோர்கள் வராத காரணத்தால் நடைபெறாமல் போனதை தொடர்ந்து நேற்று அந்நிகழ்வு மீண்டும் நெகிரி செப்பிலான் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்க ஏற்பாட்டில் இங்கு லோபாக் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் என தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணை தலைமையாசிரியர்கள், சமுக அரசியல் தலைவர்கள் ஆகிறோர் கலந்து கொண்டனர்.