டிசம்பர் 11, ரஜினியின் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தும் ஸ்ரேயாவுக்கு அப்பிடி இப்பிடி என்றுதான் படங்கள் வருகின்றனவே தவிர, இப்பிடியொரு படம் வந்துருச்சே, ஓகேன்னு சொல்லமுடியல. ஆனாலும் ‘நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி’ என்று ஞாபகப்படுத்தித்தான், புக்பண்ண வருபவர்களை ‘திக்’ ‘திடுக்’ ஆக்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.
அந்தக்கதை என்னோடது, இந்தக்கதை அவரோடதுன்னு பஞ்சாயத்து பண்ற காமெடி கொஞ்ச காலமா நடந்துக்கிட்டுதான் இருக்கு. ‘லிங்கா‘ படக்கதையே ‘எடுக்கப்பட்டது’ன்னு பேசிக்கிறாங்க. இப்படிப்பட்ட சூழ்நிலையில ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ டைரக்டர் கோபி, ‘நான் ‘லிங்கா’ படத்தொட கதைய திருடல’ன்னு சொல்லிக்கிட்டிருக்கார். என்னா வௌம்பரம்?