கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என்னாச்சு? சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி

கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என்னாச்சு?  சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி

ANGKAT SUMPAH

டிசம்பர் 10, கடந்த வெள்ளிகிழமை நடைப்பெற்ற நெகிரி செம்பிலான் மாநில இரண்டாம் தவணைக்கான மூன்றாவது சட்டமன்றக் கூட்டத்தில் மக்கள் கூட்டணியைச் சார்ந்த சிகாமட் சட்டமன்ற உறுபினர் அமினுடின், கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலம் என்னாச்சு? என்ற துணைக்கேள்வியை சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த செத்திங் சட்டமன்ற உறுபினரும், மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில கல்வி நடவடிக்கை குழுத் தலைவருமான டத்தோ சம்சுல் கஹாரி சற்றும் எதிர்பாராத அக்கேள்விக்கு தடுமாறியதோடு, அவ்விவகாரம் கவனிக்கப்படும் என்றார். இதனிடையே குறுக்கிட்டுப் பேசிய ஜெயராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அரசு கட்சிக்குழு உருப்பினருமான மாணிக்க லட்சுமண், இந்நில விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சூடான விவாதமாக எழும் என்று நம்பப்படுகிறது. கல்வி அமைச்சர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த 4 ஏக்கர் நிலத்தை, இதுநாள் வரையில், அரசுத்தரப்பு கையகப்படுத்தாமல் இருந்து வரும் வேளையில், எதனை ஆதாரமாகக் கொண்டு நிலம் ஒதுக்கப்பட்டு விட்டதாக மாணிக்கம் கூறுகிறார். அதற்கு விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுபினர்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரியவருகிறது. மேலும் தொடக்கக் காலத்தில் 8 ஏக்கர் ஒதுக்கப்பட்டதாக உறுதிகூறப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் என்று தகவல் உறுதிப்படுத்தியது.