சீனாவில் 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

சீனாவில் 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன

elephant-tusks

டிசம்பர் 10, சீனாவில் சட்ட விரோதமாக தந்தங்கள் விற்பனை காரணமாக, ஆப்பிரிக்க யானைகள் கொலை அதிகரித்திருப்பதாகவும், இதனால் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். சீனாவின் நிறைய கடைகளில் தந்த விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. 2010ல் இருந்து 2012 வரை 1,00,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

தந்தத்துக்கான விலை 2010 ஆம் ஆண்டு இருந்ததை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, இந்த வர்த்தகம் எண்ணற்ற யானைகளைக் கொன்றுள்ளது. மருத்துவம், கௌரவம் போன்ற காரணங்களுக்காக காண்டாமிருகக் கொம்பு, யானைத் தந்தத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, உரிமம் இல்லாத கடைகளில், சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் தந்த விற்பனை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.