டிசம்பர் 9- ஈப்போவில் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதிகாலை 1.00 மணியளவில், கம்போங் ஶ்ரீ கெலெபாங் தம்பஹான் டுவா, கம்போங் தெர்சுசுன் கெலெபாங் செலத்தான், கெலெபாங் பாயூ மற்றும் தாமான் பெர்துவா ஆகிய பகுதிகளிலிருந்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 285 மக்கள் ஶ்ரீ கெலெபாங் ஆரம்பப்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டனர்.
திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தொடங்கிய இந்த வெள்ளம், அதிகாலை 1.00 மணிக்குள் அப்பகுதி முழுவதும் முற்றாக பரவியது.
வழக்கத்திற்கு மாறாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் ஶ்ரீ கெலெபாங் ஆற்றின் அணைக்கட்டு உடைந்து அவ்விடத்தில் வெள்ளம் ஏற்பட துவங்கியதாக அப்பகுதியைப் பார்வையிட வந்த பேராக் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்பரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
இதனிடையே, வடிகால் நீர்ப்பாசனத்துறை இலாகாவிடமிருந்து (Jabatan Pengairan dan Saliran) முழுமையான தகவல்கள் கிடைத்தப்பின் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் சம்பரி மேலும் கூறினார்.
Previous Post: பினாங்கு மாநிலத்தில் தொடர் கொலை