டிசம்பர் 8, ம.இ.கா வரலாற்றில் முதல்முறையாக, மூன்று உதவித்தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் நடத்தப்படுகிறது.
சங்களுக்கான பதிவிலாகா வெள்ளிக்கிழமை கட்சி தலைமையகத்திற்கு வழங்கிய கடிதத்தில், கடந்தாண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அறிவித்துள்ளோடு மறுதேர்தல் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
“ கனத்த மனத்தோடு, ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா தொகுதி, கிளைகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் பேராளர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றுள்ளதை அறிவிக்கிறேன். 1946-ஆம் ஆண்டு தொடங்கிய கட்சி வரலாற்றில் இது ஒரு சோகமான அதே நேரத்தில் கருப்பு நாளாகும். கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வெளிநாட்டில் மாநாட்டில் கலந்துக்கொண்டிருப்பதால் சங்கங்களின் பதிவிலாகா வழங்கிய கடிதத்தை செயலாளர் அ.பிரகாஷ்ராவ் தம்மிடம் வழங்கியதாக டத்தோ ஶ்ரீ சுப்ரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“ROS முன்னிறுத்தியுள்ள சட்டதிருத்தங்களை நிறைவேற்றுமாறு கட்சியின் தேசியத் தலைவர் கட்சியின் தலைமைச்ச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்தாண்டு, மலாக்காவில் நடைபெற்ற ம.இ.கா கட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளது, சங்கங்களின் பதிவிலாகா மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.