டிசம்பர் 4, கடலுர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளலவு 47.50 அடியாகும். ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப் பணித் துறையினர் கண்காணித்து அதிக அளவில் தேக்காமல் குறிப்பிட்ட அடி உயரத்தில் மட்டுமே வைத்திருப்பர். மழை காலம் முடிந்த உடன் சென்னைக்கு குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு ஏரியின் நீர் மட்டத்தை உயர்த்துவர்.
தற்போது மழை காலம் முடியும் தருவாயில் உள்ளதால் எதிர் காலத்தில் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் தட்டுபாடு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு கடந்த 2 தினங்களாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.