1 நாளில் 100-இல் 7/8 பேர் அடையாள அட்டையைத் தொலைக்கின்றனர்

1 நாளில் 100-இல் 7/8 பேர் அடையாள அட்டையைத் தொலைக்கின்றனர்

myk

கோலாலம்பூர், 7 ஜூலை – நாட்டில் ஒவ்வொரு நாளும் 100இல் 7 அல்லது 8 பேராவது மைகாட் அட்டையைத் தொலைப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு உள்துறை அமைச்சு வெளியிட்ட புள்ளி விபர அறிக்கையில், அடையாள அட்டையைத் தொலைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் அம்பலப்படுத்தியது.

அவ்வகையில் 2010-ஆம் ஆண்டு 397,079 பேரும், 2011-ஆம் ஆண்டு 413,068 பேரும், 2012-ஆம் ஆண்டு 429,137 பேரும், 2013-ஆம் ஆண்டு 565,157 பேர் மைகாட் அடையாள அட்டையைத் தொலைத்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையை வைத்து கணக்கிடும் போது 46 மாதங்களில் 1.8 மில்லியன் மைகாட் அடையாள அட்டை காணாமல் போயுள்ளது. மாதமொன்றுக்கு சராசரி 39,230, ஒரு நாளைக்கு மொத்தம் 1307 மைகாட் அடையாள ஆவணங்கள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது.

 

உண்மையாகவே மைகாட் அடையாள அட்டை காணாமல் போகிறது என்றால் , அந்த 1.8 மில்லியன் அடையாள அட்டைகள் எங்குதான் போயின என்ற மிகப் பெரிய கேள்விக்குறியும் எழவே செய்கிறது.