டிசம்பர் 2, ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலை சேர்ந்த கனடா வம்சாவளியை சேர்ந்த ரோசன்பெர்க் (வயது 31) என்ற பெண், குர்து படையினருக்கு ஆதரவாக ஐ.எஸ். படையினரை எதிர்த்து போரிட்டார். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட முதல் வெளிநாட்டு பெண் வீரரான இவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை உறுதிபடுத்த முயற்சிப்பதாகவும், அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும் கனடா தெரிவித்து உள்ளது.