தாய்மொழிப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆவணக்குழு

தாய்மொழிப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆவணக்குழு

amano

நவம்பர் 29, நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆவணக்குழு ஒன்று அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என்றார் அம்னோத் தலைவர்களில் ஒருவர்.
அம்னோ வருடாந்திர மாநாட்டில் கலந்துக்கொண்ட திரங்கானு அம்மோத் தலைவரான வான் ஹகிம் வான் மொக்தார் கூறுகையில் தற்போது நாட்டில் இயங்கி வரும் தாய்மொழிப் பள்ளிகளில் நாட்டின் சுதந்திரம் சமபந்தமான பாடங்களும் விழிப்புணர்வு விஷயங்களும் எந்த அளவுக்கும் போதிக்கப்படுகின்றன என்பதனைப் பரிசீலனைச் செய்ய ஆவணக்குழு ஒன்றிணை ஏற்பாடுச் செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் கூறுகையில் தமிழ்ப்பள்ளி அல்லது சீனப்பள்ளியிலிருந்து வரும் ஏறக்குறைய 604 மாணவர்களுக்கு நமது தேசிய மொழியான மலாய் மொழியைச் சரியாகப் பேசவும் உச்சரிக்கவும் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் தேசிய சேவைத் திட்டத்தில் பயிற்சிப் பெற்று தற்போது பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைக் கற்றுக் கொண்டிருப்பவர்களும் கூட.
அதோடு, நமது நாட்டு பக்கத்தான் ரக்யாட் அணியின் தலைவர் ஒருவருக்கு நாட்டின் சுதந்திர தேதி மற்றும் மலேசிய தினத்திற்கானத் தேதியின் வித்தியாசம் கூடத் தெரியவில்லை என சுட்டிக் காட்டினார்.
நமது நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் சார்ந்த பொது அறிவுகள் பற்றாக்குறையாகவே உள்ளது. இது அவர்களை மட்டும் அல்லதாது ஒட்டுமெத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பதால் இப்பிரச்சனையைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.