நவம்பர் 29, தேச நிந்தனை சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது அது நீடிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். அச்சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றார், அவர் அம்னோ பேரவையில் உரை நிகழ்த்திய பிரதமர், அச்சட்டம் வலுப்படுத்தப்படும் என்றார். இஸ்லாத்தின் புனிதத்தை பாதுகாப்பதற்கும் இதர சமயங்களை அவமதிக்காமலிருப்பதற்குமான ஒரு சிறப்பு சட்டப்பிரிவு இதில் இணைக்கப்படும் என்றார் அவர்.
இரண்டாவதாக சபாவும், சரவாவும் பிரியவேண்டும் எனல் கோருவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டப் பிரிவும் இதில் சேர்க்கப்படும் என பேரவையில் நிகழ்த்திய தமது கொள்கை உரையில் நஜிப் கூறினார்.