நவம்பர் 28, தெலுக் இந்தானில் உள்ள சங்காட் ஜோங் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஆக அதிகரித்துள்ளது.
முந்தைய நாள் காட்டிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் அப்பகுதியில் புதிய பாதுகாப்பு மையங்கள் துவங்கப்படவுள்ளது.
அதேவேளை, டேவான் ஓராங் ராமாய் கம்போங் டெகொங்கில் 23 பேரும் சங்காட் ஜோங் ஆரம்பப்பள்ளியில் 327 பேரும் தற்போது அடைக்கலம் புகுந்திருப்பதாக அப்பகுதியின் தற்காப்புத்துறை அதிகாரி முகமது ஃபஸ்லி முகமது சமாவி தெரிவித்தார்.
பீடோர் ஆற்றில் நீர் அதிகரித்திருப்பதன் காரணமாக கம்போங் டுகோங் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது நீர்மட்டத்தின் அளவு 28.7 மீட்டர் வரை உள்ளது என ஃபஸ்லி கூறினார்.
Previous Post: ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை