மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தாதது ஏன் சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி.

மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தாதது ஏன் சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி.

monn

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என மத்திய குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ)க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு, முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்ட வழக்கின் விசாரணை தில்லி சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்குதொடர்பாக, நிலக்கரித் துறையை கவனித்து வந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஐ அதிகாரிகள், பிரதமர் தங்களின் விசாரணை வரம்பிற்கு அப்பாற்பட்டவர் என பதில் அளித்தனர்.ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த போது பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர்களிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை எனவும் நீதிபதிகள் வினவினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணை விவரங்களை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தவழக்கை முடித்துக் கொள்வ தாக கடந்த ஆகஸ்ட் மாதம்சிபிஐ அறிவித்தது. எனினும், வழக்கை முடித்துக் கொள்ளக்கூடாது என்றும், ஊழல் நடந்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியதால், வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப் பட்டது.