சிம்பு நடித்துள்ள வாலு படம், டிசம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம், வாலு. விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.மேஜிக் ரேஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.இது ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் கதை. ஹன்சிகாவுக்கும், சிம்புவுக்குமான காதல் காட்சிகள் அழகாக இருக்கும். சந்தானத்தின் காமெடியும் பரபரப்பாகப் பேசப்படும். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. டிசம்பர் 24ம் தேதி கண்டிப்பாக படம் ரிலீசாகும் என்றார் விஜய்சந்தர்.




