நவம்பர் 19, ஆஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதாரம் மற்றும் அமைதி கல்வி நிறுவனம் ஒன்று தீவிவராத பாதிப்புகள் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலக அளவில் 2013-ல் தீவிரவாத தாக்குதல்களில் அதிகமான பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2014-ல் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டை விட 2013-ல் 60 சதவீதம் தீவரவாதத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதில் ஆப்கானிஸ்தான், ஈராக்,பாகிஸ்தான், நைஜீரியா, சிரியா ஆகிய நாடுகளில் 80 சதவீத இறப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஈராக் மிகவும் மோசமாக உள்ளது. அங்கு 2013-ல் தீவிரவாதத்திற்கு 6300 பேர் பலியாகி உள்ளனர்.
அல்கொய்தா,தலிபான், போகோஹாரம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஆகியவை இந்த தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளன. இதில் 66 சதவீத தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்த இயக்கங்கள் பொறுப்பு ஏற்று உள்ளன.
2013-ல் சுமார் 18 ஆயிரம் பேர் தீவிரவாதத்தால் பலியாகி உள்ளனர். 2012-ல் 11 ஆயிரம் பேர் தீவிரவாதத்தால் பலியாகி உள்ளனர்.
2000-ம் ஆண்டு வரை 50 ஆயிரம் தீவிரவாத தாக்குதல்களில் ஒரு லட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். 2000-ம் ஆண்டில் தீவிரவாதத்திற்கு 3400 பேர் பலியாகி இருந்தனர். அது 2013-ல் 5 மடங்காக உயர்ந்து உள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்கா வெளியிட்டு உள்ள உலக தீவிரவாத இறப்பு அறிக்கையில் இருந்து இத்தகவல் பெறப்பட்டு உள்ளது.