மீண்டும் சென்னைக்கு இடம் மாறும் அஞ்சலி

மீண்டும் சென்னைக்கு இடம் மாறும் அஞ்சலி

karungali-anjali-hot-stills-4

நவம்பர் 16, டோலிவுட்டில் போட்டி அதிகரித்ததால் கோலிவுட்டுக்கு திரும்புகிறார் அஞ்சலி. சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியத்துடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களுக்கு டாடா காட்டினார் அஞ்சலி. ஒன்றரை வருடத்துக்கு முன் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் வாய்ப்பு வராததால் மூட் அவுட் ஆனார். இளம் ஹீரோக்களும் அஞ்சலியை கண்டுகொள்வதாக இல்லை. கோலிவுட்டில் தக்க வைத்திருந்த இடத்தையும் கோட்டைவிட்டு டோலிவுட்டில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் தமிழ் படமொன்றில் அஞ்சலி நடித்து வருகிறார். இதையடுத்து விமல் ஜோடியாக மற்றொரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார். தமிழில் முழுகவனத்தையும் திருப்ப முடிவு செய்திருக்கும் அஞ்சலி, இருப்பிடத்தையும் சென்னைக்கு மாற்ற உள்ளார். சென்னையில் நடந்த ‘கயல்’ பட விழாவிற்கு வந்த அஞ்சலி கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார். வந்தது அஞ்சலியா, நமீதாவா என்று திரையுலகினர் உற்றுப்பார்க்கும் அளவுக்கு எடை கூடியிருந்தார்.