நவம்பர் 13, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் பலியானவர்களின் உடல் பாகங்கள் தடயவியல் ஆய்விற்காக கார்கிவ்-க்கு அனுப்பிய பின்னரே நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுவரை, இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வில் இறங்கிய குழு தங்களால் முயன்றவரை தகுந்த விஷயங்களைக் கண்டுப்பிடித்திருப்பதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு போதுமான கனரக கருவிகளும் அதிகமான தடயவியல் நிபுணர்களும் தேவைப்படுவதாக நெதர்லாந்து குழு தலைமை அதிகாரி பீட்டர்-ஜாப் ஆல்பெர்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார்.