என் தமிழ்

வில்லியாக நடிக்கும் இனியா

iniya-hotphotos2

நவம்பர் 6, வாகை சூடவா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இனியா. தொடர்ந்து பல படங்களில் நடித்த வந்த இனியா, சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, இவர் மேலும் ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஜே.கே.எஸ். என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் ‘கரைக்கூரம்’ என்ற புதிய படத்தில்தான் இனியா வில்லி வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்த நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். சுனில் ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு பீச் ஹவுசில் அறை எடுத்து தங்குகிறார். அடையாளம் தெரியாத இடத்தில் அவள் மாட்டிக் கொண்டு தவிப்பதை கருவாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் ஜே.கே.எஸ்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to Top