நவம்பர் 6, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை ஒரு பாரம்பரிய சின்னமாக நிலைநிறுத்திம் நடவடிக்கைளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் கலாச்சரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் நேற்று அது தொடர்பான மனுவில் கையெழுத்திட்டார்.
இந்த விஷயத்தில் மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்று ஆலோசனை கூறிய அவர் விவேகானந்தா ஆசிரமம் அதன் பாரம்பரிய தன்மையோடு நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் விவேகானந்தர் ஆசிரமத்தை அய்வு மேற்கொண்டனர்.