தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று (வியாழக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு தினமும் 1½ கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் 21 லட்சம் லிட்டர் பாலையே சப்ளை செய்கிறது. ஏனைய ஒரு கோடியே 29 லட்சம் லிட்டர் பால் தனியாரால் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது. இதனால் தனியார் பால் கொள்முதல் விலையும், ஆவின் பால் கொள்முதல் விலையும் சரிசமமாக இருப்பதால், பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கே பால் கொடுக்க தொடங்கிவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனமும் பால் விலையை தற்போது உயர்த்தியுள்ளது.