பெண்கள் விவகாரங்களில் மட்டுமே பாஸ் அக்கறை காட்டுவது ஏன்

பெண்கள் விவகாரங்களில் மட்டுமே பாஸ் அக்கறை காட்டுவது ஏன்

sivaraj1

கிளந்தான் மாநிலத்தில் வேலை இடங்களுக்கு இறுக்கமான உடைகளை அணிந்து செல்லும் பெண்களையும் தூடோங் எனப்படும் தலைத்துணியை அணியாத இஸ்லாமிய பெண்களைக் கண்டுக்கும் வகையில் ’ஒப்ஸ் கெம்புர் அவூராட்’ எனும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கும் பாஸ் நடவடிக்கை ம்.இ.கா இளைஞர் அணி முற்றாக எதிர்கிறோம் கோத்தா பாரு மாநகர் மன்றத்தின் இந்த நடவடிக்கையை முற்றாக எதிப்பதுடன், இது ஒரு பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கையாகவும் நாங்கள் கருதுகிறோம்.

பழைய குருடி கதவை திறடி என்ற கதையை போல், பாஸ் கட்சி மீண்டும் தனது பழைய பழக்க வழக்கங்களை பின்பற்ற நினைப்பதை தடுத்து நிறுத்தாத ஜசெக & பிகேஆர் கட்சிகளை நாங்கள் சாடுகிறோம்.

ஜசெகவும் பிகேஆரும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை ஹீடுட் & ஷாரியா சட்டத்திட்டங்கள் மீது பாஸீடனான இவர்களின் புரிந்துணர்வு என்னவானது? பாஸ அறிமுகப்படுத்தி இருக்கும் ‘ஒப்ஸ் கெம்புர் அவூராட்’ நடவடிக்கையை ஏன் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பாஸின் இஸ்லாமிய கொள்கைகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை பாதிக்காது என்று ஜசெகாவும் பிகேஆரும் கூறியிருந்தன. ஆனால், இன்று பெண்களுக்கு எதிராக கிளந்தானில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் ‘ஒப்ஸ் கெப்புர் அவூராட்’ நடவடிக்கை எதிராக இந்த இரண்டு அரசியல் கட்சியும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

பாஸ் கட்சியை பொருத்தவரையில், கை கால்கள் தெரியும்படி ஆடை அணிவது ‘ஹராம்’ என்று கருதுகிறது. இதனை ஜசெகவும் பிகேஆரும் வரவேற்கிறதா? இருக்கமான ஜீன்ஸ் கால்சட்டைகளை அணிவது கூட தவறு என கருத்தப்படுகிறது. இதுபோன்ற விதிமுறைகள் வேலை செய்யும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பெண்கள் தொழில் முனைவராகும் முயறசிக்ளும் பாதிப்படையும்.

பெண்களின் வளர்ச்சிக்கு ஏற்புடைய கொள்கைகளில் தேசிய முன்னணி அக்கறை கொள்கிறது. ஆனால் பாஸின் அக்கறை பெண்களின் உடைகளில் மட்டுமே உள்ளது. இந்த நடவடிக்கை பெண்ணியத்திற்கு எதிர்பான ஒன்றாகும். பெண்கள் தாங்கள் அணியும் உடையை முடிவு செய்யும் உரிமையை அவர்களே பெற்றிருக்க வேண்டும் என்பதை ம.இ.கா அணி விரும்புகிறது.