அமெரிக்காவின் வடமேற்கு எல்லையான மெக்ஸிகோ அருகில் உள்ள குவாத்மாலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தினால் 32 பேர் படுகாயம் அடைந்தனர் 2 பேர் பலியாயினர். என அதிபர் ஓட்டோ பெரேஸ் மோலினா அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மோலினா தூக்கத்தில் இருந்த ஒரு குழந்தையும் நில அதிர்வினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒரு வயதான பெண் ஒருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.