ஏமனில் அல் கொய்தா – அரசு படை மோதல்: 23 பேர் உயிரிழப்பு

ஏமனில் அல் கொய்தா - அரசு படை மோதல்: 23 பேர் உயிரிழப்பு

UTK_PGK_RIV_Storm-crop

நவம்பர் 3, எண்ணெய் வளமிக்க அரபுநாடான ஏமனில், தலைநகர் சானாவை ஷியா பிரிவு ஹவ்தி போராளிகள் கடந்த செப்டம்பர் மாதம் கைப்பற்றினர். மேலும் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளையும் கைப்பற்றினர். இதற்கிடையே ஹவ்தி போராளிகளும், சன்னி பிரிவு அல் கொய்தா தீவிரவாதிகளும் தொடர்ந்து மோதிக்கொள்கின்றனர்.

இந்தநிலையில் மேற்கு மாகாணமான ஹோடிடாவில் உள்ள ஜபல் ராஸ் நகருக்குள் அல் கொய்தா தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஏமன் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பல முனை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 4 போலீஸ் வாகனங்களை திருடிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் 20 வீரர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.