புதுடெல்லி: ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் ஏற்பட்ட காலதாமத்தை கருத்தில் கொண்டு அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட காலம் சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிப்பது அரசு பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ராஜுவ் கொலைக்கைதிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தை அனுகியது. முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி தீவிரவாதத்தால் கொல்லப்பட்டதால் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கூடாது என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியிருந்தது. மேலும் அவர்களை வடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு வாதிட்டது.
இதனை அடுத்து கைதிகளை விடுவிக்க இடைகாலத்தடை விதித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது. அரசியல சாசன அமர்வு முன்பு ஏற்கனவே மூன்று வழக்குகள் இருப்பதால் அதனை விசாரித்த பிறகே நான்காவதாக ராஜுவ் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.