அக்டோபர் 27, சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டயலில் முதற்கட்டமாக மூவரின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கறுப்பு பணம் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள மூவருமே வட இந்திய வியாபாரிகள் ஆவர். தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரதீப் பர்மன் மூன்று பேரில் ஒருவர் ஆவார். இவரைத் தவிர குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த பங்கஜ் லூதியா என்ற மற்றுமொரு வியாபாரி ஆவார். கோவா மாநிலத்தைச் சேர்ந்த ராதா எஸ்.திம்ப்லு என்பவரும் மூன்று பேரில் ஒருவராவார்.
கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் மூவரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு
