என் தமிழ்

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 கல்லூரி மாணவர்கள் கைது

Arriestஉத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசி வந்தார்.

மொசித் என்ற கல்லூரி மாணவன் ஆசிரியையை ஏமாற்றி யாரும் இல்லாத வீட்டுக்கு அழைத்து சென்றான். அங்கு அவரது வாயை மூடி கற்பழித்தான். இதை அவனது நண்பர்கள் விபின், சோரப் வீடியோ எடுத்தனர்.

நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும், கொன்று விடுவோம் என்றும் மிரட்டினர்.

இதுதொடர்பாக ஆசிரியையின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் மொசிக், விபின், சோரப் ஆகியோரை கைது செய்தனர்.

Scroll to Top