என் தமிழ்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 பேர் விவரங்கள் இன்று வெளியீடு..?

black-money

அக்டோபர் 27, வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்களில் 3 பேர் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயரை உடனடியாக வெளியிட முடியாது என்றும், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பேரில் அவர்களின் பெயர் பட்டியலை பகிரங்கமாக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப சிறிதுசிறிதாக பட்டியலில் உள்ளவர்களின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார். அதனடிப்படையில் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தில் இன்று மூன்று பேரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to Top