ஷாஆலமில் மிகவும் புகழ் பெற்ற நகரின் மேட்டிடத்தில் கடைவரிசைகள் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தன. அங்குள்ள 425 கடைகளில், 196 கடைகள் 40% தீயில் சேதமடைந்தன.
ஆயினும், இன்று காலை 2.30க்கு ஏற்பட்ட அச்சம்பவத்தால் உயிருடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதிகாலை 2.57 மணிக்கு தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து 3.03 மணிக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்புப் படை நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குனர் முகமது சானி ஹருள் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்புப் படையினர் விசாரனை நடத்திவருகிறது.