நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால்,தாக்கல் செய்யப்படவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை கொண்டிருக்கும் அந்த 2015 பட்ஜெட் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடிப்படையாக கொண்டு வரையப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாளை நாடாளுமன்றத்தில் பிரதமரால் வாசிக்கப்படவுள்ள 2015 பட்ஜெட்டில்,தனி நபர் வருமான வரி குறைப்பு அடங்கி இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.தனி நபர் வருமான் வரி குறைப்பு நிச்சயம் இளைஞர்களைக் கவரும் ஒரு அம்சமாக இருக்கும் என திரு.சிவராஜ் சந்திரன் குறிப்பிட்டார்.போக்குவரத்துத் தொடர்புடைய வரிவிலக்குகளும் இளைஞஎகளையும் நாட்டு மக்களையும் கவரும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக வாகனுங்களுக்கான வரி குறைப்பும்,சாலை வரி குறைப்பும் அதில் அடங்கும் என அவ எதிர்பார்ப்பதாக கூறினார்.
இந்தியர்களின் பொருளாதார நிலையை உதவும் வகையில்,இந்திய நிறுவனங்களுக்கு போதுமான கொள்முதல் வாய்ப்புகளை அரசாங்கம் இந்த பட்ஜெட்டின் மூலம் ஏற்படுத்தி கொடுக்கும் என்று நம்பிக்கையையும் திரு. சிவராஜ் சந்திரன் முன்வைத்தார்.அத்துடன் தொழில்துறைகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் ஈடுபடுவதற்கு ஏதுவாக தொழில் திறன் பயிற்சித் திட்டங்களுக்காக அதிக ஒதுக்கீட்டை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.குறிப்பாக எண்ணெய்,எரிவாயு,வெல்டிங் துறைகளுக்கான பயிற்சி திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார்.
நகர்புற இளைஞர்களின் மேம்பாட்டில் அக்கறை கொள்ளும் வகையில்,அவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்டம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக பிபிஅர்,புறம்போக்கு நிலங்கள்,இந்தியன் செட்டல்மெண்ட் பகுதிகளில் குடியிருக்கும் இளைஞர்களின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு இந்த 2015 பட்ஜெட்டில் சிறப்பான ஒரு வழியை அமைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.அதுமட்டுமின்றி நகர்புறங்களை சேர்ந்த பட்டதாரிக்ளுக்கு சிறப்பு மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து கனரக வாகன செயல்பாட்டில் கூடுதல் கண்காணிப்பு தேவை.அமையகாலமாக கனரக வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு இதனை முன்வைப்பதாக அவர் சொன்னார்.ஒட்டு மொத்தத்தில் இந்த 2015 வரவு செலவு திட்டம் இளைஞர்களின் நலனை முன்னிறுத்தி அமைந்துருப்பதுடன் நாட்டு மக்களின் வளப்பத்திற்கு ஏதுவாக அமைந்திருக்க வேண்டும் என்பதே ம.இ.கா இளைஞர் அணியின் எதிர்பார்பாக இருப்பதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.