சிலாங்கூர், 30 அக்டோபர் 2026 : பி40 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும் மாணவர் ஒருவருக்கு 300 ரிங்கிட் பேருந்துக் கட்டண மானிய உதவியை வழங்கி வருகிறது.
2026ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மொத்தம் 10 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 3,452 மாணவர்கள் பயனடைகின்றனர்.
பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் பெற்றோருக்குச் சுமையாக இருப்பதைத் தணிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் போக்குவரத்துச் செலவுகளால் கல்வியைத் தொடர்வதில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்த உதவி வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், பொருளாதாரக் காரணங்களால் கல்வி வாய்ப்புகளை இழக்காமல் இருக்கவும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் நலனும் கல்வியும் சிலாங்கூர் மாநில அரசின் முக்கிய முன்னுரிமைகளாகத் தொடர்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.







