ராயல் மலேசிய போலீஸ் பெங்கலான் குபேர் இடைத் தேர்தல் ஏற்படும் செலவுகளுக்காக RM3.6mil ஒதுக்கியுள்ளது. புக்கிட் அமான் தளவாடங்கள் துறை இயக்குனர் டத்தோ சுல்கிப்ளி அப்துல்லா கூறுகையில் தளவாடங்கள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிக்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடைத்தேர்தல் வருகிற வியாழக்கிழமை 25/09/2014 அன்று நடக்கிறது.