என் தமிழ்

மலாக்காவில் ‘சாய் துளசி’ உணவகத்தைத் திறந்து வைத்தார் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்

மலாக்கா, 19 அக்டோபர் 2026 : மலாக்காவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சாய் துளசி’ வாழை இலையுணவகத்தை டத்தோ ஸ்ரீ எம். சரவணன் திறந்து வைத்தார். இந்த உணவகத்தின் உரிமையாளர் சுசேலன் செலானுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கல்வித் துறையில் சிறந்து விளங்கும் இந்தியச் சமூகம், தற்போது வணிகத் துறையிலும் முன்னேறி வருவது மகிழ்ச்சியளிப்பதாக டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

சுசேலன் செலானின் இந்தத் தொழில் முயற்சி பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், வணிகத்தில் ஈடுபடும் இந்தியச் சமூகத்தினருக்கு அனைவரும் தங்களால் இயன்ற ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்வியில் பெற்றுள்ள வெற்றியை வணிகத் துறையிலும் சாதனையாக மாற்றி, பொருளாதார வலிமைமிக்க சமூகமாக இந்தியச் சமூகம் உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கல்வியறிவு, பொருளாதார வலிமை மற்றும் தொழில் முனைவுத் திறன் கொண்ட சமூகம் உலகின் எந்தப் பகுதியிலும் சிறந்து விளங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top