தாப்பா, 18 அக்டோபர் 2026 : தாப்பா மகாத்மா காந்தி மண்டபத்தில், தாப்பா ம.இ.கா. தொகுதி மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி அணிகளின் பொறுப்பாளர்களுக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றப் பொறுப்பாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்துகொண்டு அன்பளிப்புகளை வழங்கினார். ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அன்பளிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது பெரும் மனநிறைவை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்த அன்பளிப்புகளை வழங்கும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இத்தகைய நிகழ்வுகள் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக அமைவதாகவும் டத்தோஸ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டார்.







