என் தமிழ்

மலேசியாவில் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள 3,400 குடும்பங்களுக்கு செல்காம் டிஜி உதவி

பெட்டாலிங் ஜெயா, 17 அக்டோபர் 2026 : மலேசியாவில் பருவமழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில், செல்காம் டிஜி நிறுவனம் (CelcomDigi) நிவாரண உதவிகளையும் அவசரகாலத் தொலைத்தொடர்பு வசதிகளையும் வழங்கவுள்ளது.

மலேசிய நிவாரண அமைப்பு (MRA), மலேசிய செஞ்சிலுவைச் சங்கம் (MRC) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சியின் மூலம், கெடா, கிளந்தான், திரங்கானு, ஜொகூர், பகாங் மற்றும் சபா ஆகிய ஆறு மாநிலங்களில் 3,400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 42,000 பேருக்கு உதவிகளை வழங்கும் வகையில் வாகனங்கள், மீட்புப் படகுகள், மின்சார உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

மேலும், 15 தற்காலிக நிவாரண முகாம்களில் இணைய வசதிகளை ஏற்படுத்தவும், வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தயாராக இருக்க உதவும் வகையில், வெள்ளப் பேரிடர் தயார்நிலைக் கையேட்டையும் நிறுவனம் வழங்கி வருகிறது.

Scroll to Top