கோலாலம்பூர், 16 அக்டோபர் 2026 : மலேசியாவில் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில், MiWEPs அமைப்பின் Career Club சார்பில் “வெற்றிகரமான வேலைவாய்ப்பு நேர்காணல்” என்ற தலைப்பில் இலவசப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படவுள்ளது.
வரும் நவம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, Teluk Panglima Garang, Rimbayu பகுதியில் உள்ள ACE Biznez Academy-யில் இப்பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
இதில் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் சுயவிவரக் குறிப்பை (Resume) தயாரித்தல், தொழில்முறைத் தோற்றம் மற்றும் முதல் சந்திப்பில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துதல், தொலைபேசி வாயிலான முதல் தொடர்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், நேர்காணல் கேள்விகளுக்குத் தன்னம்பிக்கையுடன் பதிலளித்தல், நேர்காணலின்போது பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டறையில் பங்கேற்பதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. இருப்பினும், 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் முன்கூட்டியே பதிவு செய்து தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதிவு செய்ய : https://docs.google.com/…/1FAIpQLSctIDdn7LI…/viewform…








