சிலாங்கூர், 09 அக்டோபர் 2026 : மலேசியத் தொலைத்தொடர்பு நிறுவனமான CelcomDigi Berhad, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தும் வகையில், RM10 முதல் தொடங்கும் புதிய ரோமிங் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பணம் செலுத்தும் (Prepaid) மற்றும் மாதாந்திரக் கட்டணம் செலுத்தும் (Postpaid) வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சத் திட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தலாம். உலகம் முழுவதும் 95 இடங்கள் வரை முன்னணி தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மூலம் இணைப்பைப் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.
அனைத்து முன்பணம் மற்றும் மாதாந்திரத் திட்ட ரோமிங் சலுகைகளிலும், மலேசியாவிற்கும் பயணிக்கும் நாட்டிற்குள்ளும் பேசுவதற்காக 30 நிமிடங்கள் வரை இலவச அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் பயணத்திற்குப் புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பே CelcomDigi செயலி மூலம் ரோமிங் சலுகைகளை முன்பதிவு செய்யலாம். சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய SIT மண்டலம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய மண்டலம் மற்றும் உலகளாவிய மண்டலம் என மூன்று பிரிவுகளில் பல நாடுகளுக்கான இணைப்பைப் பெறும் வசதியும் உள்ளது.
வெளிநாட்டில் தரையிறங்கியவுடன் இணைப்பைப் பயன்படுத்துவதற்காக சிம் அட்டையை மாற்றவோ, eSIM அமைப்பை நிறுவவோ அல்லது உள்ளூர் சிம் அட்டையை வாங்கவோ தேவையில்லை. ஆதரவு வழங்கப்படும் நாடுகளில் 5G ரோமிங் வசதியும் கிடைக்கும்.
CelcomDigi முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் RM10 முதல் தொடங்கும் ரோமிங் சலுகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு சலுகைக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிவேக இணையத் தரவு அளவு வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் தரவையும் வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் தங்களது இணையப் பயன்பாட்டையும் செலவையும் கட்டுப்படுத்த முடியும்.
மாதாந்திரத் திட்ட வாடிக்கையாளர்கள் RM30 முதல் வரம்பற்ற ரோமிங் சேவையைப் பெறலாம். இந்தச் சலுகையில் வரம்பற்ற 5G தரவு வசதி வழங்கப்படுவதால், பயணத்தின்போது வரைபடங்களைப் பயன்படுத்துதல், காணொளி அழைப்புகள் மேற்கொள்ளுதல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்வையிடுதல் மற்றும் பயண அனுபவங்களைப் பகிர்தல் போன்றவற்றைத் தரவு முடிந்துவிடும் என்ற கவலையின்றி மேற்கொள்ளலாம்.
Postpaid 5G 120 திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுடைய திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரோமிங் சலுகைகளில் 50% வரை சேமிப்பைப் பெறலாம்.
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்காக, ஒப்பந்தத்துடன் மாதம் RM20 முதல் அல்லது ஒப்பந்தமின்றி மாதம் RM40 முதல் தொடங்கும் தொடர்ச்சியான ரோமிங் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
இந்தப் புதிய சலுகைகள் மூலம், மலிவு விலை, பரந்த உலகளாவிய இணைப்பு மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தும் மலேசியத் தொலைபேசி எண்ணிலேயே சேவையைத் தொடரும் வசதி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வெளிநாட்டுப் பயணத்தை மேலும் எளிதாக்குவதே CelcomDigi நிறுவனத்தின் நோக்கமாகும்.







