என் தமிழ்

சட்டவிரோத இயக்கங்களின் பட்டியலில் மேலும் 23 குண்டர் கும்பல் இயக்கங்கள்

1

நாட்டில் 1966-ஆம் ஆண்டு வரை 49 குண்டர் கும்பல் இயக்கங்கள் சட்டவிரோத இயக்கங்களாக இருந்ததாகவும், மேலும் 23 குண்டர் கும்பல் இயக்கங்களையும் சட்டவிரோத இயக்கங்களின் பட்டியலில் இணைக்கப்படலாம் என்று கூட்டரசு சி.ஐ.டி இயக்குனர் டத்தோ ஶ்ரீ மொஹ்மாட் சாலே தெரிவித்தார். இது குறித்து டத்தோ ஶ்ரீ மொஹ்மாட் சாலே கூறுகையில் “நாட்டில் செயல்படும் சட்டவிரோத குண்டர் கும்பல்களைச் சேர்ந்த 40, 313 உறுப்பினர்களை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது. மேலும் அவர்களில் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது போலீசாருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், அதனை மேற்கொள்ள முடியும்” என்று கூறினார்.

Scroll to Top