என் தமிழ்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ புகழஞ்சலி : டத்தோஸ்ரீ எம். சரவணன் பங்கேற்பு

கோலாலம்பூர், 13 அக்டோபர் 2026 : தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பாணியால் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ‘முதல் மரியாதை’ புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தலைமை தாங்கித் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது தமிழ்த் திரையுலகின் மறுமலர்ச்சியையும், கிராமிய வாழ்வியலைத் திரையில் உயிர்ப்பித்த தனித்துவமான கலைப் பயணத்தையும் பிரதிபலிக்கும் அடையாளம் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாழ்வியல், உணர்வுகள், காதல், பாசம் மற்றும் மண்ணின் பெருமை ஆகியவற்றைத் தனது திரைப்படங்கள் மூலம் உலகறியச் செய்தவர் பாரதிராஜா என்றும் சரவணன் புகழாரம் சூட்டினார். அவரது படைப்புகள் தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், அவர் உருவாக்கிய கலைப் பாதை என்றும் அழியாது நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாரதிராஜா தமிழ் சினிமாவுக்குத் தந்த கிராமிய மண்வாசனை, தமிழ்த் திரையுலகின் அடையாளமாகத் தொடர்ந்து திகழும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தனது புகழஞ்சலியில் குறிப்பிட்டார்.

Scroll to Top