என் தமிழ்

K-SEMANIS’26 போட்டியில் SJKT சிம்பாங் லிமா தேசியவகைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதலிடம் வென்று சாதனை

சிலாங்கூர், 11 அக்டோபர் 2026 : மலேசியாவின் சிம்பாங் லிமா தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, K-SEMANIS’26 போட்டியில் முதல் இடத்தைப் பெற்று தங்க விருதை வென்றுள்ளது.

2026 அக்டோபர் 5-ஆம் தேதி, சிலாங்கூர் மாநிலம் கிள்ளானில் உள்ள வின்டம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற இப்போட்டியில், குழுத் தலைவர் அரீஷ்ஷர்மா மற்றும் குழு உறுப்பினர்களான மேகாஷினி சரவணன், ஷர்வின் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.

2026-ஆம் ஆண்டுக்கான தங்களது இலக்கை எட்டியிருப்பது பள்ளிக்குப் பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்குப் பங்களித்த பள்ளி நிர்வாகம், வழிகாட்டி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top