சிலாங்கூர், 11 அக்டோபர் 2026 : மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் புத்ராஜெயா அருள் நிலையம் சார்பில் இந்துதர்ம சமய வகுப்பு அக்டோபர் 10-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.15 மணி வரை நடைபெற்றது. சிலாங்கூர் மாநிலம், செர்டாங் ஜெயாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இவ்வகுப்பில் 11 மாணவர்களும் 15 பெற்றோர்களும் என மொத்தம் 26 பேர் பங்கேற்றனர்.
வழக்கமான வாராந்திர வகுப்பின் தொடக்கத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மகாபாரதம் மற்றும் பகவத் கீதையின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பிறரிடம் பரிவு மற்றும் புரிதலுடன் நடந்துகொள்வது குறித்த சமய விளக்கச் செயல்பாடு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஷ்ணு பகவான் தொடர்பான பஜனைப் பாடல்களும் விளையாட்டுச் செயல்பாடுகளும் நடைபெற்றன. இவ்வகுப்பை பூபாலன் மற்றும் ஜீவிதா ஆகியோர் நடத்தினர். பங்கேற்பாளர்களுக்கான உணவை ஜெயஸ்ரீ வழங்கினார்.
“வேர்களைப் பலப்படுத்துவோம், ஒன்றிணைந்து தர்மத்தை நிலைநாட்டுவோம்” என்ற நோக்கத்துடன், சமயக் கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் புத்ராஜெயா அருள் நிலையம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.







