என் தமிழ்

பினாங்கில் MYFutureJobs வேலைவாய்ப்பு கார்னிவல் : அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறுகிறது

பினாங்கு, 09 அக்டோபர் 2026 : வேலை தேடுவோர் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை எதிர்பார்ப்போருக்காக MYFutureJobs வேலைவாய்ப்பு கார்னிவல், வரும் அக்டோபர் 17ஆம் தேதி சுங்கை ஜாவியில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சுங்கை ஜாவி, தாமான் தேசா ஜாவி பகுதியில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவோர், தங்களின் தொழில் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எதிர்பார்ப்போர் மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஆராய விரும்புவோர் இக்கார்னிவலில் பங்கேற்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் MYFutureJobs இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு நிசாலியை 019-374 9852 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இப்போதே பதிவு செய்யுங்கள் : https://myfuturejobs.gov.my/…/karnival-myfuturejobs…/

மேலும் விவரங்களுக்கு : https://wa.me/60193749852

Scroll to Top