என் தமிழ்

CelcomDigi வழங்கும் AppleCare Services உடன் Protect+ திட்டம் : மாதம் RM50 முதல்

பெட்டாலிங் ஜெயா, 08 அக்டோபர் 2026 : மலேசியாவின் CelcomDigi நிறுவனம் AppleCare Services உடன் Protect+ எனும் பல சாதன பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது iPhone உட்பட தகுதியான Apple சாதனங்களுக்கு ஒரே மாதாந்திர சந்தா மூலம் பாதுகாப்பைப் பெற முடியும்.

Protect+ with AppleCare Services திட்டத்தின் கீழ் iPhone, iPad, Apple Watch, AirPods மற்றும் Beats ஹெட்செட்கள் உள்ளிட்ட தகுதியான Apple சாதனங்களைப் பாதுகாக்கலாம். ஒரு சாதனத்திற்கு மட்டும் பாதுகாப்பு பெறுவதுடன், ஒரே சந்தாவின் கீழ் கூடுதலாக மூன்று தகுதியான சாதனங்கள் வரை இணைத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

CelcomDigi-யின் Easy360 சாதனத் தவணைத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய iPhone மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Protect+ திட்டம் மாதம் RM50 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AppleCare Services மூலம் சாதனம் கீழே விழுதல் அல்லது திரவத்தால் சேதமடைதல் போன்ற விபத்துகளுக்கான பழுதுபார்ப்பு, Apple நிபுணர்களிடமிருந்து 24 மணி நேர முன்னுரிமை ஆதரவு, Apple அங்கீகரிக்கப்பட்ட சேவை மற்றும் சாதனத்தின் பேட்டரி திறன் 80 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைந்தால் பேட்டரி மாற்றம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், Protect+ திட்டத்தின் மூலம் iPhone திருட்டு அல்லது தொலைந்து போனால், அதற்குப் பதிலாக அதே வகையான மாற்று சாதனத்தைப் பெறும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. தகுதியான சாதனங்களை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

இந்த Protect+ with AppleCare Services திட்டத்தை CelcomDigi இணையதளம், ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள CelcomDigi சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தற்போது பெறலாம்.

Scroll to Top