கோலாலம்பூர், 08 அக்டோபர் 2026 : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவை Malaysia Superstar Rajinikanth Fan Club (MSRFC) தொடங்கியுள்ளது.
வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு TGV Pavilion Damansara Heights திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி ரசிகர்களுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் காலை 6.30 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை RM100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணத்தை CIMB வங்கிக் கணக்கு மூலம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தும்போது REF பகுதியில் “J2 [மொபைல் எண்] x [டிக்கெட் எண்ணிக்கை]” என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் தொடர்பான விசாரணைகளுக்கு வினோத் (016 673 2559) மற்றும் விஜய் (012 418 2410) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என MSRFC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








