கோலாலம்பூர், 08 அக்டோபர் 2026 : டாக்டர் விஜயராஜ் அவர்களின் ‘வேலூர் முதல் மலாயா வரை’ எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். திரைகடல் ஓடி மலாயாவுக்கு வந்து, தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த நம் முன்னோர்களின் இடம்பெயர்வு, போராட்டங்கள் மற்றும் தியாகங்களைப் பதிவு செய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இன்றைய தலைமுறையின் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட முன்னோர்களின் தியாக வரலாற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னோர்களின் வரலாறு, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் செய்த தியாகங்களை எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
‘வேலூர் முதல் மலாயா வரை’ நூலின் வெற்றிகரமான வெளியீட்டிற்கு டாக்டர் விஜயராஜ் அவர்களுக்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







