என் தமிழ்

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் வேலை பெற ரூ.67.7 லட்சம் கட்டணம் : புதிய திட்டம் முன்மொழிவு

வாஷிங்டன், 08 அக்டோபர் 2026 : அமெரிக்காவில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு அந்நாட்டில் பயிற்சி வேலை பெறுவதற்கு புதிய கட்டண முறையை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், Optional Practical Training (OPT) திட்டத்தில் முதன்முறையாக மாணவர்களைச் சேர்க்கும் கல்வி நிறுவனங்கள், ஒவ்வொரு மாணவருக்கும் 70,000 அமெரிக்க டாலர், அதாவது சுமார் ரூ.67.7 லட்சம் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. OPT புதுப்பிப்புக்கு 30,000 அமெரிக்க டாலர், அதாவது சுமார் ரூ.29 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த பின்னர், மாணவர்கள் தங்களது படிப்புடன் தொடர்புடைய துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்ற OPT திட்டம் வாய்ப்பளிக்கிறது. STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம்.

புதிய கட்டணத் திட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கும், அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் 60 நாட்களுக்குள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

Scroll to Top