என் தமிழ்

செபாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் தளத்தில் ஃபார்முலா 1 போட்டியை பார்வையிட்டார் பிரதமர் அன்வார்

செபாங், 03 அக்டோபர் 2026 : மலேசிய பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், செபாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் தளத்தில் நடைபெற்ற ஃபார்முலா 1 (F1) கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்காக அங்கு சென்றார்.

தகுதிச்சுற்று நடைபெற்று கொண்டிருந்தபோது செபாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் தளத்திற்கு வந்த பிரதமர் அன்வார் இப்ராஹிமை, மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், செபாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் தளத்தின் தலைவர் டத்தின் அனிதா அஸ்ரினா அப்துல் அசிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top