சிலாங்கூர், 02 அக்டோபர் 2026 : சிலாங்கூர் மாநிலம் கிளாங் பகுதியில் உள்ள சிம்பாங் லிமா தேசிய வகை தமிழ்ப்பள்ளி மாணவர் அரீஷ் ஷர்மா, பேச்சு, புதுமை, படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார்.
பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ள அரீஷ் ஷர்மா, WSDG புதுமைப் பிரிவில் தங்க விருதையும், WSDG தகவற்படப் பிரிவில் தங்க விருதையும் வென்றுள்ளார். மேலும், WSDG குழுத் திட்டத்திலும் தங்க விருதைப் பெற்றுள்ளார். இதனுடன், ‘மாணவர் சாதனை அரங்கம் 2026’ நிகழ்வில் “Young Champion” என்ற சிறப்பு அங்கீகாரத்தையும் அரீஷ் ஷர்மா பெற்றுள்ளார்.



சிறு வயதிலேயே STEM புதுமை, பொதுப் பேச்சு, படைப்பாற்றல், நிலையான வளர்ச்சி மற்றும் குழுப்பணி உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டு வரும் அவரது தொடர் சாதனைகள், அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்துகின்றன.
பல துறைகளில் தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் அரீஷ்ஷர்மாவின் சாதனைப் பயணம், இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது சாதனைகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.









