என் தமிழ்

CelcomDigi CD NXT : இளைஞர்களுக்கான புதிய டிஜிட்டல் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா, 02 அக்டோபர் 2026 : மலேசியாவின் அடுத்த தலைமுறை டிஜிட்டல் திறனாளர்களை உருவாக்கும் நோக்கில், CelcomDigi நிறுவனம் தனது CD திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் அடுத்தகட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், campus@celcomdigi, Young Talent Programme (YTP) மற்றும் Certifications Programme என மூன்று முக்கியத் திட்டங்கள் இந்தப் புதிய கட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

உயர்கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் டத்தோக் பேராசிரியர் டாக்டர் அஸ்லிந்தா அஸ்மான், உயர்கல்வி அமைச்சர் டத்தோ’ஸ்ரீ டிராஜா டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் சார்பில் இந்தத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இதில், campus@celcomdigi திட்டம் மலேசியாவில் முதன்முறையாக வகுப்பறைக் கல்வியையும் நேரடி தொழில்துறை அனுபவத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உண்மையான வணிகச் சவால்களில் பணியாற்றுவதுடன், தொழில்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதலையும் பெறுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் இறுதியாண்டு மாணவர்கள் CelcomDigi தலைமையகத்தில் அமைக்கப்படும் பிரத்யேக வளாகத்தில் தொழில்துறை பயிற்சியில் ஈடுபட்டு, நிறுவனத்தின் நேரடி திட்டங்களில் அனுபவம் பெற உள்ளனர். Universiti Malaya (UM), Universiti Teknologi MARA (UiTM), Universiti Kuala Lumpur (UniKL) மற்றும் HELP University ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Young Talent Programme (YTP), திறமையான இளம் பட்டதாரிகளுக்கான இரண்டு ஆண்டு தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டமாக செயல்பட்டு வருகிறது. சுழற்சி அடிப்படையிலான பணியிட அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் முக்கிய வணிகத் திட்டங்களில் நேரடி பங்கேற்பு ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இரண்டாவது குழுவில் Cloud Engineering, Cybersecurity, Data & Business Analytics, Digital Product Development மற்றும் AI & Automation உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 20 இளம் திறமையாளர்கள் இணைந்துள்ளனர்.

மேலும், Certifications Programme மூலம் செயற்கை நுண்ணறிவு (AI), Extended Reality (XR) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்கு பயிற்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திறன்களை உருவாக்குவதுடன், நாட்டின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கு பங்களிப்பதே CD திட்டத்தின் முக்கிய நோக்கம் என CelcomDigi தெரிவித்துள்ளது.

Scroll to Top